இன்னும் எத்தனை உயிர்கள் போகும்?

இன்னும் எத்தனை உயிர்கள் போகும்?

சிரியத் தலைநகர் டமாஸ்கஸின் கிழக்கு கட்டா பகுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதையும், அங்கு சிக்கியிருக்கும் 3.93 லட்சம் மக்களையும் மீட்பதாகச் சொல்லி, கடந்த வாரம் ரஷ்ய ஆதரவுடன் சிரிய அரசு வான்வழி வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது.

இந்த ஒரு வாரத் தாக்குதலில் மட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 குழந்தைகள் உட்பட ஐந்நூறைத் தாண்டியிருக்கிறது.

அதிபர் பஷார் அல் அஸாத்தின் ஆட்சியை நீக்க கிளர்ச்சியாளர்கள் 2011-லிருந்து போராடிவருகின்றனர். இது, அரசுக்கும் கலகக் குழுவுக்கும் இடையிலான போர் மட்டும் அல்ல. சிரிய அதிபரை ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளும் ஆதரிக்கின்றன.

அதிபர் அசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், ஈரான், ஈராக், லெபனான் போன்ற நாடுகள் அவரை ஆதரிக்கின்றன. சன்னி பிரிவை ஆதரிக்கும் சவுதி, துருக்கி, கத்தார் ஆகிய நாடுகள் கிளர்ச்சியாளர்களின் தரப்பில் நிற்கின்றன. பலியாகிறவர்கள் அப்பாவி மக்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in