ஆச்சரியம்... எகிப்து ராணியின் கல்லறையில் 5,000 ஆண்டுகள் பழமையான ஒயின் கண்டெடுப்பு!

ஆச்சரியம்... எகிப்து ராணியின் கல்லறையில் 5,000 ஆண்டுகள் பழமையான ஒயின் கண்டெடுப்பு!

எகிப்தின் முதல் பெண் பாரோ (ராணி) என்று நம்பப்படும் பெண்ணின் கல்லறையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுவின் சீல் செய்யப்பட்ட ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் கிறிஸ்டியானா கோஹ்லர் தலைமையிலான ஜெர்மன்-ஆஸ்திரியக் குழு, அபிடோஸில் உள்ள ராணி மெரெட்-நீத்தின் கல்லறையை அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது பெரிய பாட்டில்களில் ஒயின் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில் "ஒயின் திரவமாக இல்லை, அது சிவப்பு அல்லது வெள்ளையா என்பதை எங்களால் சொல்ல முடியாது. அதனை நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்த உள்ளோம் அதன்பின் தான் விவரம் தெரிய வரும். ஒன்றும் மட்டும் உறுதி, இந்த ஒயின் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது மட்டும் கூற முடியும்’’ என தெரிவித்துள்ளனர்.

பாலைவன கல்லறை வளாகம் போல காட்சியளிக்கும் இந்த இடம் 41 அரண்மனைகள் மற்றும் ஊழியர்களின் கல்லறைகளை உள்ளடக்கியது. சுடப்படாத மண் செங்கற்கள், களிமண் மற்றும் மரத்தால் கட்டப்பட்டு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in