சீனாவின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு... பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் பலி!

பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்
பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் இன்று நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த 5 பொறியாளர்கள் உயிரிழந்தனர், தாக்குதல் நடத்தியவரும் உயிரிழந்தார்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள தசு முகாமுக்கு சீன பொறியாளர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது இன்று தற்கொலை படையைச் சேர்ந்தவர் மோதியதில் வாகனத்தில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் 2013-ம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு (பிஆர்) திட்டத்தை செயல்படுத்துவாக அறிவித்தார். ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்தி, இந்த திட்டத்தின் மூலம் உலக நாடுகளை சீனா தங்கள் நாட்டுடன் சாலை மற்றும் கடல் போக்குவரத்து மூலம் இணைக்கும் என சொல்லப்பட்டது.

ஆனால் இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களுக்கு, சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும், அதன் மூலம் கொடுக்கப்பட்ட கடன்களும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பிற நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்கும் சீனாவின் ராஜதந்திர நடவடிக்கை என்ற விமர்சனமும் உள்ளது. எனவே இதற்கு எதிராக சமீப காலமாக பாகிஸ்தானில் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. அதேபோல சில தாக்குதல் சம்பவங்களும் நடந்துள்ளன.

சீனாவில் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக கைபர் பக்துன்கவா பகுதியில் சீனப் பொறியாளர்கள் பாகிஸ்தான் தொழிலாளர்களைக் கொண்டு பல்வேறு கட்டுமானப் பணிகளை செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தசு என்ற இடத்தில் இப்போது அணை கட்டும் திட்டம் நடந்து வருகிறது. சீனாவின் இந்த திட்டங்களுக்கு எதிராக உள்ளூர் மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் பலமுறை தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன.கடந்த 2021-ஆம் ஆண்டு தசுவில் நடந்த தாக்குதலில் 9 சீனர்கள் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் இப்போது மீண்டும் தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு
குண்டுவெடிப்பு

இதுகுறித்து பேசிய மாகாண காவல் துறை தலைவர் முகமது அலி காண்டாபூர், “பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள தசு முகாமுக்கு, சீன பொறியாளர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது தற்கொலை படையைச் சேர்ந்தவர் மோதி வெடிக்கச் செய்ததில் வாகனத்தில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர்” என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in