மர்ம நபர் கண்மூடித்தனமாக தாக்குதல்... பறிபோன உயிர்கள்: அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்தும் துப்பாக்கி கலாச்சாரம்

மர்ம நபர் கண்மூடித்தனமாக தாக்குதல்... பறிபோன உயிர்கள்: அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்தும் துப்பாக்கி கலாச்சாரம்

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபா் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா். இந்த சம்பவம் அமெரிக்காவை உலுக்கியது. துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர அதிபர் ஜோ பைடன் புதிய சட்டம் கொண்டு வர உள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் துல்சா நகரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் மா்ம நபா் ஒருவா் இன்று அதிகாலை புகுந்துள்ளார். அப்போது, திடீரென தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவா்கள் மீது சரமாாியாக சுட்டு உள்ளார். இதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் அந்த மர்ம நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல் துறையினர் தொிவித்தனா். துப்பாக்கிச் சூட்டில் பலா் காயமடைந்துள்ளனா். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிப் சூடு கலாச்சாரம் அதிகரித்து வருவது அமெரிக்க மக்களை பதறவைத்துள்ளது. இந்த சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in