தன் பாலின திருமணம்... எந்தெந்த நாட்டில் எல்லாம் அங்கீகாரம் தெரியுமா?

தன் பாலின ஈர்ப்பாளர்கள்
தன் பாலின ஈர்ப்பாளர்கள்

அமெரிக்கா உட்பட உலகில் மொத்தம் 34 நாடுகளில் தன் பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் தன் பாலின திருமணத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே  உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் இந்தியாவில் தன் பாலினத் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படுமா என்பது இனி மத்திய அரசின் முடிவில் உள்ளது. இதனால் இந்தியாவில் தன் பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை அறிய  இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டி உள்ளது.

இந்நிலையில் தான் பல நாடுகளில் தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மனித உரிமைகள் பிரசார அறக்கட்டளையின் தகவலின்படி அமெரிக்கா, பிரிட்டன் முதல் தைவான் வரை மொத்தம் 34 நாடுகளில் தன் பாலின திருமணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி கூபா, அன்டோரா, ஸ்லோவெனியா, சுவிட்சர்லாந்து, கோஸ்டரிகா, ஆஸ்திரியா, தைவான், ஈகுவடார், பெல்ஜியம், பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க் உள்ளிட்ட நாடுகளில் தன் பாலின திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மால்டா, நார்வே, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன், மெக்சிகோ, தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, கனடா, நெதர்லாந்து, நியூசிலாந்து, போர்ச்சுக்கல், உருகுவே உள்ளிட்ட நாடுகளிலும் தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தன் பாலின திருமணத்துக்கு முதல் முதலாக சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய நாடு  நெதர்லாந்து ஆகும். நெதர்லாந்தில் கடந்த 2001ல் தன் பாலின திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஆசிய நாடுகளை பொறுத்தமட்டில் தைவான் முதல் நாடாக தன் பாலின திருமணத்தை அங்கீகரித்துள்ளது.

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in