பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட சிறுவன்; சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி: 11 பேர் படுகாயம்

பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட சிறுவன்; சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி: 11  பேர் படுகாயம்

பிரேசிலில் இரண்டு பள்ளிகளில் சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 ஆசிரியர்கள் உள்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தென்கிழக்கு பிரேசில் நாட்டில் உள்ள எஸ்பிரிடோ சாண்டோ மாநிலத்தில் உள்ள அராக்ரூஸ் நகரில் ஒரே தெருவில் இரண்டு பள்ளிகள் உள்ளன. நேற்று இந்த பள்ளிகளுக்குள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நழைந்த சிறுவன் திடீரென சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார்.

இந்த தாக்குதலில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்த நான்கு மணி நேரத்திற்குப் பிறகு துப்பாக்கிச்சூடு நடத்தியது 16 வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டது. அவரை போலீஸார் கைது செய்துள்ளதாக எஸ்பிரிடோ சாண்டோ கவர்னர் ரெனாடோ காசாக்ராண்டே தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்தவர்களின் நினைவாக மூன்று நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," துப்பாக்கியால் சுட்ட மாணவன் போலீஸ்காரரின் மகனாவார். அவர் தனது தந்தையின் இரண்டு துப்பாக்கிகளை இந்த, தாக்குதலில் பயன்படுத்தியுள்ளார். இந்த மாணவன் ஜூன் வரை துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி ஒன்றில் தான் மாணவராக படித்து வந்துள்ளார். இதன் பின் அவரை வேறு பள்ளியில் அவரது பெற்றோர் மாற்றியுள்ளனர். இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளதாக தெரிகிறது" என்றார். இந்த தாக்குதலுக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா இரங்கல் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in