இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள இன்னும் 18 மாதங்களாகும்: பிரதமர் ரணில் வெளிப்படை பேச்சு!

இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள இன்னும் 18 மாதங்களாகும்: பிரதமர் ரணில் வெளிப்படை பேச்சு!

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு 18 மாதங்கள் ஆகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில், "இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும்.

அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவி கோரும் அதேவேளையில், தற்போது நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நன்கொடை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது" என்று கூறினார்.

மேலும்," ஐக்கிய தேசியக் கட்சியால் முன்மொழியப்பட்டவாறு அரசு 2020-ல் சர்வதேச நாணய நிதியத்தை அணுகியிருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையால் சுட்டிக்காட்டியபடி, இலங்கை முழுக்க முழுக்க அவசரநிலையை எதிர்கொள்கிறது. எனவே, உலக வல்லரசுகளின் ஆதரவு எமக்கு தேவை. ஏற்றுமதி சார்ந்த வணிக மாதிரியை அறிமுகப்படுத்துவதன் மூலம் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இலங்கையைப் போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரமாக மாற்ற வேண்டும். சீனா இலங்கைக்கு கடன் ஏற்பாடுகள் மூலம் உதவி செய்து வருகிறது. ஆனால், இந்தியா பல முனைகளில் அரசுக்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in