16 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது: ராமதாஸ் கண்டணம்

ராமதாஸ்
ராமதாஸ் 16 தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது: ராமதாஸ் கண்டணம்

16 தமிழக மீனவர்களை இன்று இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டணம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வங்கக்கடலில் தமிழகத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அவர்களை இரு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டனர். தமிழகத்தின், ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்களாக அந்த மீனவர்கள் இருக்கலாம் எனத் தெரிகின்றது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பாரம்பர்யமாக மீன்பிடித்து வரும் வங்கக்கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்தால் கூட சிங்களக் கடற்படையினர் கைது செய்கின்றனர். இது அவர்களின் பாரம்பர்ய உரிமையை பறிக்கும் செயல் ஆகும். இதை அனுமதிக்கக் கூடாது. தமிழக மீனவர்களின் தொடர் கைதும், அவர்களின் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதலும் செய்யப்படுவதால் வாழ்வாதாராம் கேள்விக்குறியாகின்றது. ஒவ்வொரு படகு பறிமுதல் செய்யப்படும்போது அதில் இருக்கும் 20 மீனவ குடும்பங்கள் அதாவது நூறுபேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. மீனவர்களின் இந்தச் சிக்கலுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களையும், அவர்களின் உபகரணங்களையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in