மிரட்டப்படும் ஊடகங்கள்... இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பத்திரிகையாளர்கள் பலி!

பலியான பத்திரிகையாளர்கள் உடல்கள் மீட்பு
பலியான பத்திரிகையாளர்கள் உடல்கள் மீட்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில்," இஸ்ரேல் விமான தாக்குதல்களில், 50 உள்ளூர், சர்வதேச ஊடக அமைப்புகள் குறிவைக்கப்பட்டன. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 11 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 பத்திரிகையாளர்களைக் காணவில்லை.

காயமடைந்த பத்திரிகையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்
காயமடைந்த பத்திரிகையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்

மேலும், காஸா பகுதியில் நிலவும் மின்தடை மற்றும் இணையதள பிரச்சினையால் பத்திரிகையாளர்கள் சரிவர செயல்பட முடியவில்லை.

சமூக வலைதளங்களில் பத்திரிகையாளர்களுக்கு இஸ்ரேல் அச்சுறுத்தல் விடுக்கிறது. இப்பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in