எரிவாயு தட்டுப்பாட்டால் 1000 ஓட்டல்கள் மூடல்: இலங்கையில் தொடரும் சோகம்

எரிவாயு தட்டுப்பாட்டால் 1000 ஓட்டல்கள் மூடல்: இலங்கையில் தொடரும் சோகம்

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்வதால் கொழும்பில் ஆயிரம் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. விலைவாசி உயர்வு, மின்வெட்டு காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் உள்ள 2 ஆயிரம் ஓட்டல்களில் ஆயிரம் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் அசேல சம்பத் கூறுகையில், "கொழும்பில் சமையல் எரிவாயு கிடைக்காமல் நாளுக்கு நாள் ஓட்டல்கள் மூடப்படுவது அதிகரித்து வருகிறது" என்று கூறினார். ஓட்டல் தொழிலை நம்பியுள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் எரிவாயு ஏற்றிக் கொண்டு கப்பல் இலங்கைக்கு நேற்று வந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கப்பலில் 3900 மெட்ரிக் டன் எரிவாயு நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in