விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் மரணம், 8 பேர் காயம்!

விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் மரணம், 8 பேர் காயம்!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகியிருக்கிறது. இந்நிலையில், தெற்கு கரோலினாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 8 பேர் காயமடைந்தனர்.

வணிக நிறுவனங்கள் மற்றும் அரங்குகளைக் கொண்ட மால் ஒன்றில் நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர் யார் என இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. விருந்து நிகழ்ச்சியின்போது, ஏற்பட்ட தகராறில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என்று போலீஸார் கூறியிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in