
ஹமாஸ் அமைப்பினர் வீசிய ராக்கெட்டை ஐயன் டோம் அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். போர் விதிமுறைகளுக்கு மாறாக, இரு தரப்புமே பொதுமக்கள் கூடும் இடங்களை குறி வைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஹமாஸ் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதால், அதனை எதிர்கொள்ள இஸ்ரேல் ராணுவம் ஐயன் டோம் பாதுகாப்பு அமைப்பை நம்பி உள்ளது.
சமீபத்தில் ஹமாஸ் படையினர் முக்கிய இடத்தை குறி வைத்து வீசிய ராக்கெட்டை, இஸ்ரேல் ராணுவம் ஐயன் டோம் உதவியுடன் இடைமறித்து அழித்த வீடியோவை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம் இதனை உறுதி செய்துள்ளது. பல கோடி ரூபாய் செலவில் இஸ்ரேல் உருவாக்கியுள்ள ஐயன் டோம் அமைப்பு, ஏவுகணைகளின் பாதையை கண்டறிந்து, அதனை வானிலேயே இடைமறித்து அழிக்கும் வல்லமை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!
பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!
அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!
அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!