கு.ப.கி. இப்போது எம்ஜிஆர் உயில் பேச்சை எடுக்காதது ஏன்?

கு.ப கிருஷ்ணன்
கு.ப கிருஷ்ணன்

ஓபிஎஸ் ஆதரவாளர்களை அதிரடியாக கட்டம்கட்டி வருகிறார் ஈபிஎஸ். ஆனால், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நீக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் அவர் ஓபிஎஸ் ஆதரவாளர் என்பதை விட வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது என்கிறார்கள்.

ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தபோது, எம்ஜிஆர் எழுதிய உயில் பற்றி முதலில் வெளியே சொன்னது கு.ப.கிருஷ்ணன் தான். அப்போது யாருடைய ஆதரவாளராகவும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாத கு.ப.கி., " எம்ஜிஆர் உயில்படி அதிமுக தலைமையை அதன் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும். 80 சதவீத தொண்டர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தான் தலைமைக்கு வர வேண்டும் என 1984-ல் எம்ஜிஆர் எழுதிய உயிலில் கூறியுள்ளார். இதை மீறினால் நீதிமன்றத்தை நாடுவேன்” என்றார். கு.ப.கி. இப்படிச் சொன்னதில் எடப்பாடியாருக்கு ஏக வருத்தமாம். “கட்சியைவிட்டு வெளியே போய்விட்டு திரும்பி வந்தவரை மதித்து அவருக்கு நாம் தேர்தலில் சீட் கொடுத்தோம். ஆனால், அந்த விசுவாசம்கூட இல்லாமல் நமக்கெதிராகவே இப்படிப் பேசிவிட்டாரே” என தனக்கு நெருக்கமான வட்டத்தில் புலம்பிய ஈபிஎஸ், தனக்கான நேரம் வந்ததும் சமயம் பார்த்து கு.ப.கி-யை தூக்கிவிட்டார் என்கிறார்கள். கட்சிக்குள் இருக்கும்போதே கலகக் குரல் எழுப்பிய கு.ப.கி., இப்போது எம்ஜிஆர் உயில் பற்றி வாயே திறக்காமல் இருப்பது ஏன் என்றும் அதிமுகவுக்குள்ளேயே சிலர் அவரது வாயைக் கிளறுகிறார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in