ஈபிஎஸ்ஸுக்கு எல்லாமுமாக இருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை, அதிரடி ரெய்டுகளால் முடக்கிப்போட்டு விடலாம் என்று நினைத்தது திமுக அரசு. ஆனால் அவரோ, அதற்கெல்லாம் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. “இதெல்லாம் எதிர்பார்த்ததுதானே” என கூலாகச் சொல்லிவிட்டு கழகத்தினரின் இல்ல விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகள் என கலகலப்பாகிவிட்டார். இப்போதைக்கு கைது நடவடிக்கை இருக்காது என்பதால் வெளிப்படையாக நடமாடத் தொடங்கி இருக்கும் அவர், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தனது சகாக்களை தேர்தல் பணிக்காக இறக்கி விட்டிருக்கிறாராம். “இவரை இப்படியே வெளியில சுத்தவிட்டா உள்ளாட்சித் தேர்தலிலும் கோவையை நாங்க மறந்துட வேண்டியதுதான்” என திமுகவினர் சத்தமாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.