அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!

அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!

கடந்த 12-ம் தேதி, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கிங் வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், அப்படியே மக்களைச் சந்தித்துப் பேசிவிட்டு அம்மன் குளம் பகுதியில் ஒரு அலுவலகத்தில் உட்கார்ந்து, காணொலி கூட்டம் ஒன்றிலும் கலந்துகொண்டார். அப்போது அவருக்குப் பக்கத்தில் பணம் எண்ணும் மெஷின் இருந்தது. இந்தப் படத்தை சமூக ஊடகங்களில் பார்த்துவிட்டு, “எம்எல்ஏ அலுவலகத்தில் பணம் எண்ணும் மெஷின் எதற்கு?” என்று வில்லங்கப் புள்ளிகள் விமர்சனங்களைக் கிளப்பினார்கள். “வீட்டுக்கு வர நேரம் இல்லாத காரணத்தால், நண்பரின் அலுவலகத்தில் இருந்தபடியே காணொலி கூட்டத்தில் கலந்து கொண்டேன். அது எனது அலுவலகம் அல்ல. அங்கே கவுன்டிங் மெஷின் இருந்ததும் எனக்கு தெரியாது. இந்த உண்மை தெரியாமல் ஒரு சிலர் கற்பனைச் சிறகுகளை விரிக்கின்றனர்" என்று, வானதி தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் சொன்ன பிறகும் விவாதம் ஓய்ந்தபாடில்லை.

Related Stories

No stories found.