கறார் வசூல்... காஞ்சி சுந்தர்!

கறார் வசூல்... காஞ்சி சுந்தர்!

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக சீனியர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா உத்திரமேரூர் ஒன்றியத்தில் கடந்த வாரம் நடந்தது. கூடவே, கழக குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வையும் சேர்த்திருந்தார்கள். உதயநிதி ஸ்டாலின் தான் பொற்கிழிகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். திமுக மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் அமைச்சர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி கட்சித் தலைமையிடம் பேர்வாங்கிக் கொள்வது எளிது.

ஆனால், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் அமைச்சர் பதவியில் இல்லாததால் இந்த நிகழ்ச்சிக்கான நிதியைத் திரட்ட ரொம்பவே சிரமப்பட்டாராம். ஒருவழியாக, கட்சியிலும் உள்ளாட்சியிலும் புதிதாகப் பொறுப்புக்கு வந்திருக்கும் திமுக புள்ளிகளுக்கு ஆளுக்கொரு தொகையை நிர்ணயம் செய்து அவர்களை துரத்திப் பிடிக்காத குறையாக விரட்டி வசூலித்து இந்த நிகழ்ச்சியை நடத்திச் சமாளித்தாராம் சுந்தர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in