தஞ்சை அதிமுகவில் தகுதியான ஆட்களே இல்லையா?

தஞ்சை அதிமுகவில் தகுதியான ஆட்களே இல்லையா?

மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து ஊர்களிலும் காலையில் நடந்தது. ஆனால், தஞ்சையில் மட்டும் இந்த ஆர்ப்பாட்டத்தை மாலையில் தான் நடத்தினார்கள். காரணம் இதுதான் - காலையில் கும்பகோணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற முன்னாள் அமைச்சர் காமராஜ், தஞ்சை ஆர்ப்பாட்டமும் தனது தலைமையில் தான் நடக்கவேண்டும் என்று அடம்பிடித்தாராம். அதனால், அவருக்காக தஞ்சை ஆர்ப்பாட்டத்தை மாலைக்கு மாற்றி வைத்தார்களாம். தஞ்சை மண்டலத்தில் வைத்திலிங்கம் உள்ளிட்ட ஒருசிலரைத் தவிர பெரும்பாலான அதிமுக முக்கிய தலைகள் எல்லாம் ஈபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். ஆனாலும், வைத்திலிங்கத்தின் கைக்குள் இருந்த தஞ்சை அதிமுக இனி நமது கைக்குள் இருக்க வேண்டும் என வீராப்புக் காட்டுகிறாராம் காமராஜ். அதனாலேயே, திருவாரூர் மாவட்டச் செயலாளராக இருக்கும் இவர் தஞ்சைக்குள்ளும் ஆதிக்கம் செலுத்துகிறாராம். இந்த விவகாரம் ஈபிஎஸ் அணிக்குள்ளேயே இப்போது புகைச்சலை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in