வேலு வந்தார் வேலையை முடிச்சார்!

வேலு வந்தார் வேலையை முடிச்சார்!
ஏ.வ.வேலு

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இட ஒதுக்கீடு பஞ்சாயத்துகளை சுமூகமாகப் பேசிமுடித்த பெருமை, அந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலுவையே சாரும் என்கிறார்கள். சொந்தக் கட்சிக்குள்ளும் போட்டி மனப்பான்மையில் இருந்தவர்களை எல்லாம் உட்காரவைத்துப் பேசி சமாதானம் செய்திருக்கிறாராம் வேலு. இதனால், அந்த மாவட்டத்தில் ஒரு இடத்தில்கூட போட்டி வேட்பாளர்கள் களத்தில் இல்லை. ”பொன்முடி கட்டுப்பாட்டுல இருக்குறப்ப அவரு சொல்ற ஆளுங்க மட்டும்தான் நிக்க முடியும். வேற யாரும் எதுவும் பேசக்கூட முடியாதே... இது புதுசால்ல இருக்கு” என்று உற்சாகத் துள்ளலில் இருக்கிறார்கள் கள்ளக்குறிச்சி கழக கண்மணிகள்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.