நிழல் அமைச்சர் சுரேஷ்ராஜன்?

நிழல் அமைச்சர் சுரேஷ்ராஜன்?
சுரேஷ்ராஜன்

குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆளுகைக்கு உட்பட்ட குமரி கிழக்கு மாவட்டத்தில் பெரிதாக தலைகாட்டுவதே இல்லை. ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் தலைக்காட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறார். அதனால், கிழக்கு மாவட்டத்தில் சர்வ வல்லமை கொண்ட அதிகாரத்துடன் நிழல் அமைச்சராக வலம் வருகிறார் சுரேஷ்ராஜன். கட்சிக்காரர்கள் ஒட்டும் போஸ்டர்களில் கூட சுரேஷ்ராஜன் தலையே பெரிதாக தெரிகிறது. இதையெல்லாம் பார்க்கும் ஏரியாவாசிகள், “ஒரு மனுசனுக்கு இந்த அளவுக்கு அடக்கம் இருக்கக்கூடாதுப்பா” என்று சிரிக்கிறார்கள் .

Related Stories

No stories found.