நயினாரை மாத்துங்கோ!

நயினாரை மாத்துங்கோ!
நயினார் நாகேந்திரன்

பாஜகவும், திமுகவும் பயங்கரமாக மோதிக்கொண்டாலும், சட்டப்பேரவைக்குள் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரனும், சபாநாயகர் அப்பாவுவும் ரொம்ப இயல்பாகப் பழகுகிறார்கள். ஒவ்வொரு பிரச்சினையிலும் கட்சியின் நிலைப்பாடு குறித்து நயினார் பேச ஆரம்பிக்கும்போது, அப்பாவு அதைக் கிண்டல் அடிப்பதையும், நயினார் அதை நயமாக ரசிப்பதையும் பார்த்து மற்ற 3 பாஜக எம்எல்ஏ-க்களும் தங்களுக்குள் பொருமுகிறார்கள். வானதி சீனிவாசன் மட்டும்தான், திமுகவுக்கு எதிராக அவையில் வலுவான வாதங்களை வைக்கிறார். நயினாரோ பழைய திராவிட பாசத்தில் இருக்கிறார். அதனால், அவரை சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என தலைமைக்கு மெல்ல தூபம்போட ஆரம்பித்திருக்கிறார்களாம்.

Related Stories

No stories found.