புது ரூட்டில் புத்தி சந்திரன்

புது ரூட்டில் புத்தி சந்திரன்
புத்தி சந்திரன்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான புத்திசந்திரன், ஒரு காலத்தில் சசிகலா தரப்புடனும் கோடநாடு எஸ்டேட்டுடனும் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். அதிமுகவிலிருந்து இவரை ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டணி ஓரங்கட்டி வைத்ததற்கு, இதுவும் ஒருமுக்கிய காரணம். பிற்பாடு இவர், தனது அரசியல் எதிர்காலத்துக்காக எஸ்.பி.வேலுமணி பக்கம் சேர்ந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கொடுக்கவில்லை. இனியும் இப்படியே இருக்க முடியாது என முடிவெடுத்துவிட்ட புத்தி, வனத் துறை அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரன் மூலம் திமுகவுக்கு தூது விட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்குள்ளாக, “புத்தி சந்திரன் திமுகவுக்கு வந்தால் அவர் தான் ஊட்டி நகர்மன்றத் தலைவர்” என்று திமுக தரப்பில் இப்போதே சிலர் பேசுவதும் காதில் விழுகிறது.

Related Stories

No stories found.