சுத்தலில் விடும் சுதாகரன்!
சுதாகரன்

சுத்தலில் விடும் சுதாகரன்!

கேரள மாநில காங்கிரஸ் கட்சியில், அண்மையில் புதிதாக மாவட்ட தலைவர் நியமனங்கள் நடந்தன. இதில் சீனியர்களான உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் ஆதரவாளர்கள் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால், ஏகத்துக்கும் அதிருப்தி அலைகள் அடிக்க ஆரம்பித்தன. இதை சமாளிக்க, மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் ரகசியமாக அமைதிக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். இதில், உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னிதலா, எதிர்கட்சித் தலைவர் சதீசன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், 4 பேருக்கும் சேதாரம் இல்லாமல் மாநில நிர்வாகிகள் பொறுப்புகளைப் போடுவதாக உத்தரவாதம் அளித்து, அதிருப்தி அலைகளை தற்காலிகமாக அடக்கி வைத்திருக்கிறாராம் சுதாகரன்.

Related Stories

No stories found.