மாநகராட்சியையும் காலிசெய்த மகாபுள்ளிகள்!

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சியில் திட்டப் பணிகளை எடுத்துச் செய்த ஒப்பந்ததாரர்களுக்கு, 6 மாதமாக பில்கள் எதுவும் செட்டிலாகவில்லையாம். அதிகாரிகளைக் கேட்டால், “போன ஆட்சியில எல்லாத்தையும் துடைச்சு எடுத்தாச்சு. இப்ப சம்பளம் போடவே ததிகினத்தோம் போடுறோம். இவ்ளோ பெரிய மாநகராட்சியில இப்ப 50 லட்சம் தான் கையிருப்பு இருக்கு. ஆனா, 40 கோடி ரூபாய்க்கு மேல பில் பட்டுவாடா பண்ணணும். அதனால 6 மாசம் கழிச்சு வாங்க பாக்கலாம். அதுக்கு முன்னால புதுசா எந்த வேலையிலயும் கை வெச்சுட்டு காசு கேட்டு வந்துடாதீங்கய்யா” என்று கெஞ்சாத குறையாகச் சொல்கிறார்களாம். பாவம் தான் பணம் போட்ட ஒப்பந்ததாரர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in