அமித் ஷாவையே சமாளிக்கத் தெரிஞ்சவருக்கு...

அமித் ஷாவையே சமாளிக்கத் தெரிஞ்சவருக்கு...
விஜயபாஸ்கர்

நியாயமாகப் பார்த்தால், கரோனா தொடக்கத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில்தான் முதலில் ரெய்டு நடந்திருக்க வேண்டுமாம். ஆனால் மற்றவர் வீட்டுப் பக்கமெல்லாம் வண்டியைத் திருப்பும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், சி.விஜயபாஸ்கரைப் பற்றி சிந்தனையே இல்லாமல் இருக்கிறார்களாம். என்னய்யா சூட்சுமம் என்று புதுக்கோட்டை பக்கம் விசாரித்தால், “எதற்கும் வாயைத் திறக்க வேண்டாம்; கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருங்கன்னு அவருக்கு அட்வைஸ் பண்ணிருக்காங்க. அதனால தான் நீட் விவகாரத்துலகூட அண்ணே மூச்சுவிடல. ஆனானப்பட்ட அமித் ஷாவையே சமாளிக்கத் தெரிஞ்சவருக்கு மருமகனை சரிக்கட்டுறதா பெரிய விஷயம்” என்று நமட்டுச் சிரிப்புச் சிரிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in