அண்ணா போஸ்டரில் அண்ணன் சொன்ன சேதி!

அண்ணா போஸ்டரில் அண்ணன் சொன்ன சேதி!

2019-ல் நடந்த கோவை மாவட்டம் சூலூர் தொகுதி இடைத்தேர்தலில், தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என காத்திருந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி. ஆனால் அப்போதும், அடுத்ததாக 2021 பொதுத் தேர்தலிலும் செ.ம. வேலுசாமியை அதிமுக தலைமை கண்டுகொள்ளவில்லை. இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறார் செ.ம.வேலுசாமி. இந்த நிலையில் அண்ணா பிறந்தநாளுக்காக, தான் அடித்து ஒட்டிய போஸ்டரில், தன்னை முன்னாள் அமைச்சர், முன்னாள் மேயர் என்று மட்டுமே விளித்த வேலுசாமி, அதிமுக அடையாளத்தை அப்பட்டமாய் மறைத்திருந்தார். அந்த போஸ்டரில், ‘மூத்தகுடி தமிழ்மண் காக்க சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் விட்டுச்சென்ற அண்ணாவின் கொள்கைகளை தன்னலமில்லாமல் வழிநடத்துபவர்கள் வழிநடப்போம்’ என வேலுசாமி போட்டிருந்த வாசகங்களும், பல்வேறு ஊகங்களைக் உலவ விட்டிருக்கிறது. “கொங்கு மண்டல அதிமுகவினரை குறிவைத்துத் தாக்கித் தூக்கும் திமுக, வேலுசாமிக்கும் வலைவிரித்துவிட்டது. அதைத்தான் அண்ணா போஸ்டரில் அண்ணே மறைமுகமாகச் சொல்லி இருக்கிறார்” என்கிறார்கள் கோவை அதிமுகவினர்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.