ஐ.பி மீதும் ஐயா மகன் பாயலாம்!

ஐ.பி மீதும் ஐயா மகன் பாயலாம்!
பழனிவேல் தியாகராஜன்

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு கால்வாயில் நேரடியாக மோட்டார் பொருத்தி, சட்டவிரோதமாக தண்ணீரை உறிஞ்சும் பெருவிவசாயிகள் பலர் இருக்கிறார்கள். இவர்களைக் கண்டிக்கும்விதமாக, அண்மையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொன்ன சில வார்த்தைகள் விவசாயிகள் மத்தியில் பூதாகரமாய் வெடித்தது. இதையடுத்து, சமரசத் தூதுவராக பக்கத்து மாவட்டத்து அமைச்சர் ஐ.பெரியசாமியை அனுப்பி வைத்தது திமுக தலைமை. விசாரணையில், பெருந்தனக்காரர்களும், முன்னாள் அரசு அதிகாரிகளும் தண்ணீரைச் சுரண்டுவது உண்மைதான் என்று தெரிந்தும், “உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. நீங்கள் எப்போதும்போல் விவசாயம் செய்யலாம்” என்ற ரீதியில், அவர்களுக்குச் சாதகமாகவே பேசிமுடித்துவிட்டுப் போய்விட்டாராம் ஐபி. இதைத் துளியும் எதிர்பார்க்காத தியாகராஜன், ஐபி மீது கெட்ட கடுப்பில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சீக்கிரமே, ஐபி மீதும் ஐயா மகன் பாய்ந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் மதுரை உடன்பிறப்புகள்.

Related Stories

No stories found.