ஜாலம் போடும் நீலமேகம்!

ஜாலம் போடும் நீலமேகம்!
நீலமேகம்

‘அதிகாரிகள் எதைத் தொட்டாலும் தன்னைக் கேட்காமல் தொடக் கூடாது’ என தாண்டவம் ஆடுகிறாராம் தஞ்சை திமுக எம்எல்ஏ-வான நீலமேகம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தள்ளுவண்டிக் கடைகளை அகற்றிவிட்டு, சாலை அகலப்படுத்தும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டபோது, “ஆக்கிரமிப்பில் யாரும் கைவைக்கக் கூடாது” என்று சொல்லி, அங்கு வந்து உட்கார்ந்து விட்டாராம் நீலமேகம். இதேபோல், ஆபிரகாம் பண்டிதர் சாலையில் உள்ள தரைக்கடைகளை அகற்றுவதற்கும் கட்சிக்காரர்களை அனுப்பி கட்டையைப் போட்டுவிட்டாராம். பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் தொடங்கி, அனைத்திலும் கொஞ்சமாவது நியாயமாக நடக்க வேண்டும் என நினைக்கிறாராம் மாநகராட்சி ஆணையர் சரவணன். அதற்கே, “அவரை மாற்றிவிட்டுத்தான் மறுவேலை” என்று சபதம் போடுகிறாராம் நீலமேகம். இவரது தாம்தூம்களால், தஞ்சையின் வளர்ச்சி கெட்டுவிடுமோ என முகம் சுளிக்கிறார்கள் மக்கள்.

Related Stories

No stories found.