மீண்டும் அண்ணன் வீட்டு மன்னன்?

மீண்டும் அண்ணன் வீட்டு மன்னன்?
மன்னன்

மு.க.அழகிரியை ஒதுக்கிவைத்த காலத்திலிருந்து, அவருக்கு நெருக்கமான முன்னாள் துணை மேயர் மன்னனையும் திமுக தலைமை ஒதுக்கியே வைத்திருக்கிறது. அழகிரிக்கு விசுவாசமாக இருந்த மூர்த்தி, தளபதி உள்ளிட்டோர் எல்லாம் கருணாநிதி இருக்கும்போதே ஸ்டாலின் பக்கம் போய்விட்டார்கள். ஆனால், மன்னன் உள்ளிட்ட ஒருசிலர் மட்டும், என்றைக்காவது ஒருநாள் அழகிரி அண்ணன் நமக்கு நல்லவழியைக் காட்டுவார் என்று காத்திருந்தார்கள். அதற்கான வழி தெரியவில்லை என்றதும் இப்போது அவர்களும் சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டிருக் கிறார்கள். இந்நிலையில், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மா.ஜெயராம் அண்மையில் மதுரையில் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் மன்னனும் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் மன்னன்...
அந்த நிகழ்ச்சியில் மன்னன்...

இதைப் பார்த்துவிட்டு, “மற்றவர்களைப் போல் மன்னனும் பிழைப்பைப் பார்க்கலாம் என்று வந்துவிட்டாரா? ” என்று மதுரை உடன்பிறப்புகள் விவாதம் நடத்த, “ரெண்டு பேரும் ஒரே ஏரியாக்காரங்க. அப்படி இருக்கையில அவர் வீட்டு குடும்ப நிகழ்ச்சியில கலந்துக்கிட்டது ஒரு குத்தமாப்பா?” என்று நியாயம் கேட்கிறாராம் மன்னன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in