
“இவரெல்லாம் திராவிடக் கட்சியில் இருக்க வேண்டிய ஆளுப்போய்” என மதுரை மக்கள் வேடிக்கையாகப் பேசும் மார்க்சிஸ்ட் எம்பி-யான சு.வெங்கடேசன், மதுரை அரசியலில் தனக்கென ஒரு வலுவான இடத்தை தக்கவைக்கும் முயற்சியில் இருக்கிறார். இதற்காக கம்யூனிஸ்ட் கொள்கைகளை எல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி வைத்துவிட்டு, ‘பசையான’ பார்ட்டிகளிடம் எல்லாம் நல்லுறவு பாராட்டுகிறார். குறிப்பாக, மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதியிடம் அவர் காட்டும் நெருக்கம், சாதி ரீதியான விமர்சனத்துக்கும் வழிவகுத்திருக்கிறது. மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில்கூட, தளபதியின் திருநகர் கல்யாண மண்டபம் அருகே அவரோடு நின்றுதான் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் வெங்கடேசன். சும்மா இருப்பார்களா நாம் தமிழர் தம்பிகள்? “தெலுங்கர்கள் ஒண்ணு சேர்ந்துட்டாங்கப்பா” என்று கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்.