அதிகாரத்தில் ஆணையர்... ஆதங்கத்தில் கவுன்சிலர்கள்!

ஆணையருடன் மேயர் ராமநாதன்
ஆணையருடன் மேயர் ராமநாதன்

உள்ளாட்சித் தேர்தல் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் பதவிக்கு வந்த பிறகு மாநகராட்சி, நகராட்சிகளின் ஆணையர்கள் அதிகாரம் செய்வதை அளவாகக் குறைத்துக் கொண்டுவிட்டார்கள். ஆனால், தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் மட்டும் இன்னும் பழைய தோரணையிலேயே அதிகாரம் செலுத்துகிறாராம். ஒட்டுமொத்த மாநகராட்சி நிர்வாகத்திலும் ஆணையரும் இரண்டு தலைமைப் பொறியாளர்களும் சொல்வதுதான் சட்டமாக இருக்கிறதாம். இவர்கள் மூவருமாக சேர்ந்து திமுக மேயர் சண்.ராமநாதனை கிட்டத்தட்ட தலையாட்டி பொம்மை கணக்காய் வைத்திருக்கிறார்களாம். ஆணையர் சொல்வதை அச்சுப் பிசகாமல் அப்படியே மேயர் கேட்பதால் பொது நிகழ்ச்சிகளில்கூட மேயரைவிட ஆளுநர் சரவணக்குமாரின் குரல் தான் சவுண்டாக ஒலிக்கிறதாம். ஆணையர் சொல்வதற் கெல்லாம் மேயர் அப்படியே தலையாட்டுவதால் தாங்கள் சொல்லும் எதையும் அதிகாரிகள் காதுகொடுத்துக்கூட கேட்பதில்லை என திமுக மாமன்ற உறுப்பினர்களே மனம் புழுங்குகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in