கேரள காங்கிரஸை கதறவிடும் கே.வி.தாமஸ்!

கேரள காங்கிரஸை கதறவிடும் கே.வி.தாமஸ்!
கே வி தாமஸ்

கேரளத்தில் மார்க்சிஸ்ட்களைச் சமாளிப்பதைவிட சொந்தக் கட்சி தோழரான முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தாமஸை சமாளிப்பதே காங்கிரஸ்காரர்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொள்ள சசிதரூரும், தாமஸும் அழைக்கப்பட்டார்கள். தலைமை சிக்னல் தராததால் சசிதரூர் இந்த நிகழ்ச்சிக்குப் போகவில்லை. ஆனால், தாமஸ் கலந்து கொண்டார். காங்கிரஸ்காரர்களுக்கு அந்தக் கோபமே இன்னும் தீராத நிலையில், திருக்காக்கரைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார் கே.வி.தாமஸ். இது நியாயமா என யாராவது கேட்டால், “இடைத் தேர்தலில் ஆளும்கட்சி ஜெயிச்சா தானே தொகுதிக்கு நல்லது நடக்கும் “ என்று நியாயம் பேசுகிறாராம். அப்படியே, காங்கிரஸ் தலைமையையும் தன்னையும் பிரிக்க சொந்தக் கட்சிக்குள்ளேயே சதி நடப்பதாக கூசாமல் கொளுத்திப் போடுகிறாராம் தாமஸ்!

Related Stories

No stories found.