இண்டிகோவை இம்சிக்கும் காம்ரேடுகள்!

இண்டிகோவை இம்சிக்கும் காம்ரேடுகள்!

அண்மையில் இண்டிகோ விமானத்தில் திருவனந்தபுரம் வந்த கேரள முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து காங்கிரஸார் கோஷம் போட்டனர். அப்படி கோஷம்போட்டவர்கள் மீது உனடியாக வழக்குப் பாய்ந்தது. ஆனால், அதே விமானத்தில் வந்த மார்க்சிஸ்ட் எம்எல்ஏ-வான ஜெயராஜன் தங்களைத் தாக்கியதாக காங்கிரஸார் கொடுத்த புகாரை போலீஸ் கண்டுகொள்ளவே இல்லை. இதில் நடுநிலையாக செயல்பட்ட இண்டிகோ நிர்வாகம், ஜெயராஜனுக்கு மூன்று வாரங்களும், சம்பந்தப்பட்ட காங்கிரஸாருக்கு இரண்டு வாரங்களும் இண்டிகோவில் பறக்க தடைவிதித்தது. இதையே கோர்ட்டில் முறையிட்டு ஜெயராஜன் மீது வழக்குப் போட உத்தரவு பெற்றனர் காங்கிரஸார். இதனால் அதிர்ந்துபோன மார்க்சிஸ்ட்கள், காங்கிரஸாரை விட்டுவிட்டு இண்டிகோவை படுத்தி எடுக்கிறார்கள். “இண்டிகோவைப் புறக்கணிப்போம்” என ஜெயராஜன் முழங்கி வரும் நிலையில், கோழிக்கோடு விமானநிலையத்தில் இயக்கப்படும் இண்டிகோ பேருந்துகளுக்கு சாலைவரி செலுத்தவில்லை என அபராதம் விதித்திருக்கிறது கேரள அரசின் மோட்டார் வாகனத் துறை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in