இதையெல்லாம் அரசியலாக்குறாங்களே... ஓபிஎஸ் வேதனை!

ராமேஸ்வரத்தில் ஓபிஎஸ்...
ராமேஸ்வரத்தில் ஓபிஎஸ்...

அண்மையில், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கரையில் சிறப்பு யாகம் நடத்திய ஓபிஎஸ், ராமநாதசுவாமி கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தினார். இதேபோல் அவரது மகனும் எம்பி-யுமான ரவீந்திரநாத் குமாருடன் காசிக்கும் சென்று கங்கையிலும் காசி விஸ்வநாதர் ஆலயத்திலும் பூஜைகள் செய்து வழிபட்டார். இந்தப் படங்கள் மீடியாக்களில் வெளியானதும், இழந்த அதிகாரத்தை பிடிப்பதற்காக ஓபிஎஸ் ராமநாதசுவாமி ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் செய்ததாக ஊடகங்களில் சிலர் செய்திபரப்பினார்கள். ஈபிஎஸ் தரப்பும் இதை விமர்சனம் செய்து வேடிக்கை பேசியது.

தனது மனைவி இறந்து  ஓராண்டு பூர்த்தியான நிலையில்  அவருக்கு திதிகொடுக்க வேண்டிய கடமை ஓபிஎஸ்சுக்கும் அவரது குடும்பத்துக்கும்  உள்ளது.  ராமேஸ்வரம்  அக்னி தீர்த்த கடற்கரையில் மகாளய பட்சத்தில் இதைச் செய்வது சிறப்பு என தனக்கு நெருக்கமான புரோகிதர்கள் சொன்னதால் இந்தப் பூஜைகளைச் செய்தாராம் ஓபிஎஸ். அதேபோல் தாய்க்கு தலைமகன் என்ற முறையில் ரவீந்திரநாத் குமார் காசியில் இந்த பூஜைகளைச் செய்தாராம். உண்மை இப்படி இருக்க, வெளியான செய்திகளால் ரொம்பவே அப்செட் ஆகிப்போன ஓபிஎஸ், “ இதையெல்லாம் அரசிலாக்குறாங்களே” என்று நொந்து கொண்டாராம். இந்த நிலையில், தற்போது டெல்லியில் தங்கி இருக்கும் ஓபிஎஸ், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக ஒரு தகவல் வட்டமடிக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in