விடைபெறுகிறாரா விஜயகுமார் எம்பி?

மோடியுடன் சந்திப்பு...
மோடியுடன் சந்திப்பு...

அதிமுகவின் ராஜ்யசபா எம்பி-யான விஜயகுமார் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியின் கடைநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். ஜெயலலிதா காலத்தில் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர், ராஜ்யசபா எம்பி என இரட்டை அதிகாரத்துடன் கம்பீரமாக வலம்வந்த விஜயகுமார், கட்சிக்குள் தளவாய் சுந்தரம் கை ஓங்க ஆரம்பித்ததும் மெல்ல மெல்லக் காணாமல் போனார். அண்மைக்காலமாக விஜயகுமாரை அதிமுக நிகழ்ச்சிகள் எதிலும் பார்க்க முடியவில்லை. மாறாக, தனது எம்பி பதவி முடிய இன்னும் ஒன்றரை மாதங்களே இருக்கும் நிலையில், பாஜக வட்டாரத்துடன் நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறார் விஜயகுமார். அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்தபோது தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும் விஜயகுமார் பேசிவிட்டு வந்ததாகச் சொல்கிறார்கள். சசிகலா புஷ்பா வழியில் இவரும் பதவிக்காலம் முடிந்ததும் பாஜகவில் ஐக்கியமானாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் குமரி மாவட்ட அதிமுகவினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in