விரக்தியில் விஜயதரணி!

விஜயதரணி
விஜயதரணி

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான விஜயதரணி, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். தமிழக காங்கிரஸ் தலைவராக வருவதற்கான தகுதி தனக்கு இருப்பதாக வெளிப்படையாகவே பேசிவருகிறார் விஜயதரணி. இப்படிப் பேசுவதாலோ என்னவோ இவரை கட்சியில் திட்டமிட்டு ஓரங்கட்டுகிறார்களாம். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இவர் மீது நல்ல ஒப்பீனியன் இருந்தாலும் மற்றவர்கள் வேண்டா வெறுப்பாகவே நடத்துகிறார்களாம். ராகுல் நடைபயணத்தில் குமரி மாவட்டத்தின் எம்எல்ஏ என்ற முறையில்கூட இவருக்கு உரிய முக்கியத்துவம் இல்லையாம். கரூர் ஜோதிமணிக்கு கொடுக்கப்பட்ட மரியாதைகூட தனக்கு இல்லை என வருத்தப்படும் தரணி, சேனல் விவாதங்களுக்கு அழைப்பவர்களிடம், “கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விவாதத்தில் வந்து உட்கார்ந்து நான் என்ன பேசமுடியும்” என்று கேள்வி எழுப்புகிறாராம். அதேசமயம், பாஜக ஆட்சி குறித்து நட்பு ரீதியாக யாராவது கேட்டால், “அதற்கு என்ன... நல்லாத்தானே போயிட்டு இருக்கு” என்று ஒளிவு மறைவில்லாமல் சொல்கிறாராம் விஜயதரணி. இதைவைத்து, “குஷ்புவைப் போல் இந்த அம்மாவுக்கும் அதிரடியா ஏதாச்சும் முடிவெடுத்துடப் போறாங்க” என்று காங்கிரசுக்குள்ளேயே சில கிசுகிசுக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in