தற்கொலைக்குப் பின்னால்...

வெங்கடாசலம்
வெங்கடாசலம்

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கை தீவிரமாக விசாரித்தால், அது இன்னொரு கோடநாடு வழக்கு அளவுக்கு சூடுபிடிக்கும் என்கிறார்கள். முன்னாள் அமைச்சர் தங்கமணியின் கிரிப்டோ கரன்சி முதலீடுகளின் பின்னணியில் வெங்கடாசலமும் இருந்ததாகச் சொல்கிறார்கள்.

தங்கமணி
தங்கமணி

வெளிநாட்டில் வசித்துவரும் வெங்கடாசலத்தின் ரத்த வழி சொந்தம் மூலமாக, கிரிப்டோ கரன்சி முதலீடுகள் நடந்திருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சந்தேகிக்கின்றனர். அதை நூல்பிடித்து அறிந்த நிலையில்தான் வெங்கடாசலம் தற்கொலை நடந்திருக்கிறது. அந்தச் சிக்கலை எடுத்தால், தங்கமணி மட்டுமல்லாது அதிமுகவின் இன்னும் சில முக்கிய தலைகளும் சிக்கலாம் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in