விடாது துரத்தும் வீரபாண்டியார் மகன்!

வீரபாண்டி பிரபு
வீரபாண்டி பிரபு

வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசுகளான செழியன், ராஜா ஆகியோர் இறந்துவிட்ட நிலையில், அடுத்த வாரிசாக அரசியலுக்கு வரத் துடிக்கிறார் டாக்டர் பிரபு. வீரபாண்டி ஆறுமுகத்தின் 2-வது மனைவி லீலாவதியின் மகனான இவர், சென்னையில் மருத்துவராக இருக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதிக்கும், சட்டப்பேரவைத் தேர்தலில் வீரபாண்டி தொகுதிக்கும் சீட் கேட்டு திமுகவில் விருப்ப மனு கொடுத்தார். ஆனால், வாய்ப்புக் கிட்டவில்லை. இப்போது சேலம் மாநகர மேயர் கனவுகளைச் சுமந்துகொண்டு, அப்பாவின் கோட்டையான சேலத்தில் முகாமிட்டிருக்கிறார் பிரபு. கட்சிக்குள் ஸ்டாலினுக்கு எதிரான விமர்சனங்களை தயங்காது எடுத்துவைத்தவர் வீரபாண்டியார். ஆனால், அவரது வாரிசான பிரபுவோ, உதயநிதி ஸ்டாலின் என்றால் உருகித் துடிக்கிறாராம். அந்த அளவுக்கு இருவரும் நட்பாகவும் இருக்கிறார்களாம். ஆனால், வீரபாண்டியாரின் குடும்பம் மீண்டும் சேலம் திமுகவில் தழைத்துவிடக்கூடாது என்பதில் கருத்தாய் இருக்கிறாராம் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி. தடைகளைத் தாண்டி நண்பனை மேயராக்க உதயண்ணா உதவுகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in