அவங்க இருந்தாதான் ‘ஃபங்ஷன் சிறக்கும்’!

அவங்க இருந்தாதான்  ‘ஃபங்ஷன் சிறக்கும்’!

மாற்றுக்கட்சி முகாமைவிட சொந்தக் கட்சிக்குள்தான் பாஜக எம் எல்ஏ வானதி சீனிவாசனுக்கு, பகை வளர்க்கும் பங்காளிகள் பஞ்சமில்லாமல் இருக்கிறார்கள். இதை நன்கு உள்வாங்கி வைத்திருக்கும் வானதி, பாஜகவினரை விட அதிமுகவினரைத் தான் அதிகம் நம்புகிறாராம். கடந்த வாரம், தனது தொகுதிக்குள் 19 இடங்களில் நன்றி அறிவிப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் வானதி. ஆனால், எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகுதான் தெரிந்ததாம், அதிமுக பொறுப்பாளர்கள் எல்லாம் வெளி மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பணிக்காக சென்றுவிட்டார்கள் என்று. அவர்கள் இல்லாமல் போனால், சொந்தக் கட்சிக்காரர்கள் சொதப்பிவிடுவார்கள். அதிமுகவினர் இருந்தால்தான் ‘ஃபங்ஷன் சிறப்பா இருக்கும்’ என்று முடிவுக்கு வந்த வானதி, நன்றி அறிவிப்புக் கூட்டங்களை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துவிட்டாராம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in