வாக்குறுதியை மறக்கும் வானதி

வாக்குறுதியை மறக்கும் வானதி
வானதி

கோவை தெற்கில் கமலை எதிர்த்துக் களம்கண்டபோது, “தேர்தல் முடிந்ததும் கமல் எங்கே இருப்பாரோ தெரியாது. ஆனால், நான் இங்கேயே இருப்பேன்” என்று தேனொழுகப் பேசி வாக்குக் கேட்டார் பாஜகவின் வானதி சீனிவாசன். மக்களும் நம்பி அவருக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்கவைத்தார்கள். ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பிறகு மொத்தமாக மாறிவிட்டார் வானதி. காரணம், அவர் எக்ஸ்ட்ரா லக்கேஜாக சுமக்கும் பாஜக மகளிரணி தேசிய தலைவர் பதவி. இந்தப் பொறுப்பில் இருப்பதால், அடிக்கடி வட இந்தியாவுக்குப் பறக்க வேண்டி இருக்கிறதாம். இதனால், சொன்னபடி வானதியால் தொகுதிக்குள் முழுமையாக இருக்க முடியவில்லை. கடந்த 26-ம் தேதி தொடங்கி, 4 நாட்களுக்கு தனது தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை திட்டமிட்டிருந்தார் வானதி. ஆனால், ஒருநாள் மட்டுமே அந்த நிகழ்வுகளில் அவரால் பங்கெடுக்க முடிந்ததாம். அதற்குள்ளாக ஒடிசாவிலிருந்து அழைப்பு வரவே, எஞ்சிய 3 நாள் நிகழ்வுகளை ரத்து செய்துவிட்டு விமானம் ஏறிவிட்டார் வானதி. “கட்சியின் அகில இந்திய பொறுப்பில் இருப்பதால் முன்ன மாதிரி தொகுதி நிகழ்ச்சிகள்ல என்னால கலந்துக்க முடியாது. அதனால அதையெல்லாம் நீங்களே சமாளிச்சுருங்க” என்று லோக்கல் பாஜகவினருக்கு பவர் கொடுத்துவிட்டாராம்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in