வைத்திக்கு வைத்தியம் பார்க்கும் ஈபிஎஸ் டீம்!

வைத்திக்கு வைத்தியம் பார்க்கும் ஈபிஎஸ் டீம்!

முதல் பொதுக்குழுவில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாகப் பேசிவிட்டு தஞ்சைக்குத் திரும்பிய வைத்திலிங்கத்தை சந்திக்க அவர் வழக்கமாக தங்கும் தமிழ்நாடு ஓட்டலில் கையில் பூங்கொத்து சகிதம் காத்துக் கிடந்தது ஒருகூட்டம். இந்த நிலையில், இரண்டாம் பொதுக்குழு கூட்டத்துக்கு முன்னதாக தஞ்சை பகுதியில் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகவும் வைத்திக்கு ஆதரவாகவும் மாறி மாறி போஸ்டர் யுத்தம் நடந்தது. ஆனால், அதிமுகவிலிருந்து வைத்திலிங்கம் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிமிடத்திலிருந்து நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வைத்திக்கு ஆதரவான போஸ்டர்கள் வருவது நின்றுவிட்ட நிலையில், விட்ட குறையோ தொட்ட குறையோ என வைத்தியின் பக்கம் நின்றுகொண்டிருந்த ஒன்றிய செயலாளர்களில் சிலரும் ஈபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டார்கள். எஞ்சியவர்களையும் தங்கள் பக்கம் இழுத்து தஞ்சையில் வைத்தியை தனிமரமாக நிறுத்த தகுந்த பிளான்களைப் போட்டுக் கொண்டிருக்கிறதாம் ஈபிஎஸ் டீம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in