வருத்தத்தில் வைத்தி!

வருத்தத்தில் வைத்தி!
வைத்திலிங்கம்

மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் டெல்டா மாவட்டங்களுக்கு வந்தபோது, முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஆஜர் கொடுத்தார்கள். ஆனால், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் தஞ்சையை விட்டு நகரவில்லை. “சொல்றதையும் கேட்க மாட்றாங்க... சுயமாவும் செயல்படமாட்றாங்க” என்று கட்சித்தலைமை மீது ஏக வருத்தத்தில் இருக்கும் வைத்தி, “இதுக்கெல்லாம் எங்கிருந்து செலவு செய்யுறது?” என்று அலுத்துக் கொண்டாராம். அதனால், வேண்டாவெறுப்பாகவே ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார். மற்ற மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் தலா 2 இடங்களில் மழைச் சேதங்களைப் பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால், வைத்தியின் தஞ்சை மாவட்டத்தில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த இடத்தில் சுமார் 200 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்க வைத்ததோடு, தனது கடமையை முடித்துக் கொண்டார் வைத்தி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in