டெல்டாவில் உல்டா ஆன வைத்தி கணக்கு!

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் கையை உறுதியாகப் பிடித்துக்கொண்டு நிற்கிறார் வைத்திலிங்கம். அதேசமயம், அவருக்கு ஆதரவு கொடுக்கப்போய் தஞ்சை மண்டலத்தில் தனது செல்வாக்கை தொலைத்துவிட்டு நிற்கிறார் வைத்தி. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை மீறிப் போகமாட்டார்கள் என நினைத்தார் வைத்தி. ஆனால், அதை பொய்யாக்கி அவரது ஆதரவாளர்கள் பலரும் ஈபிஎஸ் அணிக்கு அப்பீட் ஆகிவிட்டார்கள். அதிலும் தனது வலதுகரமாக இருந்த காந்தி அந்தப் பக்கம் போனதில் வைத்தி ஏகத்துக்கும் அப்செட் என்கிறார்கள். முன்னாள் எம்எல்ஏ-க்களான திருவையாறு ரத்தினசாமி, கும்பகோணம் ராம.ராமநாதன், பட்டுக்கோட்டை சி.வி.சேகர், பேராவூரணி கோவிந்தராஜன், தஞ்சை முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஆகியோரும் வைத்திக்கு டாட்டா சொல்லிவிட்டு ஈபிஎஸ் பக்கம் போய்விட்டார்கள். தஞ்சை மண்டலத்தின் பெரும்பாலான ஒன்றிய செயலாளர்களும் ஈபிஎஸ் பக்கமே நிற்கிறார்கள். வைத்தி தனக்கெதிராக திரும்புகிறார் என்றதுமே முன்னாள் அமைச்சர் காமராஜை வைத்து தஞ்சை மண்டல அதிமுக நிர்வாகிகளை தன்பக்கம் திருப்பும் வேலைகளை ‘கணக்காக’ செய்து முடித்துவிட்டாராம் ஈபிஎஸ். உறவினர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளித்து வந்த வைத்திலிங்கத்தின் அணுகுமுறையால் அதிருப்தியில் இருந்த பலரும் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in