ஹாட் லீக்ஸ் - வழுக்கும் வைத்திலிங்கம்!

ஹாட் லீக்ஸ் - 

வழுக்கும் வைத்திலிங்கம்!
வைத்திலிங்கம்

‘உள்ளாட்சித் தேர்தலில் அந்தந்தப் பகுதி அதிமுக பொறுப்பாளர்களும் தேர்தல் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்’ என்று அதிமுக தலைமை வலியுறுத்தியதாம். அதனால், தஞ்சை மாவட்டத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் பலரும் ‘மாவட்டச் செயலாளரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், தங்களுக்கு கைகொடுப்பார், கவலை இல்லை’ என மலைபோல் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவரோ, “முடிஞ்சவங்க கரையேறிக்கோங்கப்பா” என்று சொல்லி, மருந்துக்குக்கூட பணத்தை இறக்க மறுத்துவிட்டாராம். கூடுதல் தகவல்... வைத்திக்கு என்ன பயமோ தெரியவில்லை, தேர்தல் பிரச்சாரத்திலும் அவ்வளவாய் தலைகாட்டவில்லையாம். அப்படியே தலைகாட்டிய இடங்களிலும் மறந்தும்கூட திமுகவை தாக்கிப் பேசவில்லையாம். இதையெல்லாம் சுட்டிக்காட்டும் ரத்தத்தின் ரத்தங்கள், ”வைத்தி எதோ ஒரு முடிவுலதான் இருக்காரு போல” என்று கண் சிமிட்டுகிறார்கள்.

Related Stories

No stories found.