ஹாட்லீக்ஸ் - உதயநிதியின் தூத்துக்குடி பயணம் ரத்து ஏன்?
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக பயணத் திட்டம் இருந்ததாம். ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யும் திட்டத்தை கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டுவிட்டாராம் உதயநிதி. அதற்குக் காரணம் திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் என்கிறார்கள். ஜோயலை தூத்துக்குடி மேயராக்கலாம் என முன்மொழிந்தாராம் உதயநிதி. ஆனால், கனிமொழியும், அமைச்சர் கீதா ஜீவனும் ஜோயலுக்கு எதிராக சில கருத்துகளை எடுத்துவைத்து, அந்த முயற்சிக்கு ஆரம்பமே முட்டுக்கட்டை போட்டுவிட்டார்களாம். இதனால், ஜோயலுக்கு கவுன்சிலர் சீட்கூட தராமல் விட்டுவிட்டார்களாம். தனது தம்பி ஜெகனை மேயராக்க துடிக்கும் அமைச்சர் கீதா ஜீவனின் உள் யோசனையும் இதற்குக் காரணம் என்கிறார்கள். இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான், தனது தூத்துக்குடி பயணத்தை ரத்து செய்தாராம் உதயநிதி. ஜோயலுக்கு உள்ளாட்சியில் கிடைக்காததை வேறுவிதமாக சமன் செய்வார் உதயநிதி என்கிறார்கள்.