எம்.ஆர்.கே. எல்லைக்குள் என்ட்ரி ஆகும் உதயநிதிஎம்.ஆர்.கே. எல்லைக்குள் என்ட்ரி ஆகும் உதயநிதி
உதயநிதி ஸ்டாலின்

கடலூர் மாவட்ட திமுகவை இரண்டாக பிரித்திருந்தாலும் மாவட்டத்தைப் பொறுத்தவரை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும் அவரது சொந்தபந்தங்களும் வைத்தது தான் இன்றளவும் சட்டம். இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி, வடலூர் நகர செயலாளர்கள் பதவிகளுக்கு ஆண்டுக் கணக்கில் செயலாளர்களை நியமிக்காமல் பொறுப்பு ஆட்களைப் போட்டே பொழுதைக் கடத்துகிறார்கள். இதற்குக் காரணம், எம்.ஆர்.கே-யின் உறவினரும், குறிஞ்சிப்பாடி ஒன்றிய திமுக செயலாளருமான சிவகுமார் என்கிறார்கள். இரண்டு நகரங்களிலும் நகர செயலாளர் வந்துவிட்டால் கட்சியில் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதால் தந்திரமாக கட்டையப்போட்டு வருகிறாராம் சிவகுமார். இந்த விஷயத்தை உதயநிதியின் விசுவாசிகள் அவரது காதில் சமயம்பார்த்துப் போட்டு விட்டார்களாம். இதனையடுத்து, இவ்விரண்டு நகரங்களுக்கும் உட்கட்சி தேர்தல் நடத்தும் போது இளைஞரணியைச் சேர்ந்தவர்களை நிறுத்தி அவர்களை நகர செயலாளர்களாக்க வேண்டும் என்று என்று உத்தரவிட்டிருக்கிறாராம் உதயா!

Related Stories

No stories found.