ராஜ்ஜியத்தை பிடிக்கிறாரா ரத்தினவேல்?

ஈபிஎஸ்சை சந்தித்த போது...
ஈபிஎஸ்சை சந்தித்த போது...

ஓபிஎஸ் பக்கம் போனதால் பதவியை இழந்திருக்கிறார் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெல்லமண்டி நடராஜன். இவருக்குப் பதிலாக ஆவின் கார்த்திகேயன் மாவட்டச் செயலாளராக வருவார் என பேசப்பட்ட நிலையில், தற்போது கட்சியின் முன்னாள் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பி-யுமான ரத்தினவேலின் பெயரையும் சிலர் முனுமுனுக்கிறார்கள். இது விஷயமாக திருச்சி மாநகர அதிமுகவுக்கு பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் தங்கமணியைச் சந்தித்துப் பேசினாராம் ரத்தினவேல். கே.பி.முனுசாமி சொன்னால் எடப்பாடியாரிடம் எடுபடும் என்பதால் அவரிடமும் அப்ளிகேஷன் போட்டாராம். கூடவே, எடப்பாடியா ரையும் சந்தித்து அரசல் புரசலாக தனது அவாவைச் சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம். இந்த விஷயம் வெளியில் கசிந்ததை அடுத்து, “ஏற்கெனவே தலைமைக் கழக பொறுப்பில் இருந்தவருக்கே அடுத்ததாக மாவட்டச் செயலாளர் பொறுப்பும் கொடுத்தால் புதியவர்கள், இளையவர்கள் எங்கே போவதாம்?” என்று கொடிபிடிக்கிறதாம் ஆவின் கார்த்திகேயன் கோஷ்டி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in