திருச்சி மேயருக்கு திசைக்கொருவர் போட்டி!

அன்பழகன்
அன்பழகன்

திருச்சி மேயர் வேட்பாளரை தெரிவு செய்வதில், சீனியர் அமைச்சர் நேருவுக்கும் ஜூனியர் அமைச்சரான அன்பில் மகேஷுக்கும் போட்டா போட்டி தொடங்கிவிட்டது. முன்னாள் எம் எல்ஏ-வான கே.என்.சேகரனும் 2011 மேயருக்குப் போட்டியிட்டு தோற்ற மாவட்ட மகளிரணி செயலாளர் விஜயா ஜெயராஜும் வேறு ரூட்டில் மேயர் இருக்கைக்கு முயற்சித்துக் கொண்டிருக்க, இவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, தனது நெடுநாளைய விசுவாசியான முன்னாள் துணை மேயர் அன்பழகனுக்கு மேயர் சீட் வாங்கிக்கொடுக்க மெனக்கிடுகிறார் அமைச்சர் நேரு. இவருக்குப் போட்டியாக மலைக்கோட்டை பகுதி திமுக செயலாளர் மதிவாணனை மேயராக்க ரொம்பவே மெனக்கிடுகிறாராம் அன்பில் மகேஷ். இந்த நகர்வுகளை எல்லாம் பார்த்துவிட்டு, அறிவாலய அனுபவம் ஜெயிக்கப் போகிறதா அல்லது கிச்சன் கேபினெட் தந்திரம் ஜெயிக்கப் போகிறதா என பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள், மலைக்கோட்டை மாநகர் உடன்பிறப்புகள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in