
தனது வெகுநாள் கனவான மேயர் பதவியை அடைந்துவிட்டாலும் இன்னமும் மேயர் பங்களாவில் குடியேறாமல் துணை மேயர் இல்லத்திலேயே இருக்கிறார் திருச்சி திமுக மேயர் அன்பழகன். ஏற்கெனவே துணை மேயராக இருந்தபோது இந்த வீட்டில்தான் தங்கி இருந்தாராம். அது நல்ல ராசியான வீடு என நினைக்கும் அன்பழகன், இப்போதும் அங்கேயே வாசம்செய்கிறார். இதனால், மேயர் பங்களா லட்சங்களைக் கொட்டி புதுப்பிக்கப்பட்டு பூட்டிக் கிடக்கிறது. இப்படியே போனால் இதுவே விமர்சனத்துக்குள்ளாகும் என விசுவாசிகள் ஒன்றுக்கு பலமுறை எடுத்துச் சொன்னதால், சித்திரையில் நல்ல நாள் பார்த்து மேயர் பங்களாவுக்கு இடப்பெயர்ச்சி செய்ய இசைந்திருக்கிறாராம் அன்பழகன்.