மனம் தேறட்டும் மைதீன்கான்மனம் தேறட்டும் மைதீன்கான்
திமுகவினருடன் மைதீன்கான்... (வலமிருந்து இரண்டாவது)

தொடர்ந்து 20 ஆண்டுகளாக வெற்றிவாகை சூடி பாளையங்கோட்டை தொகுதியை தனது கைக்குள் வைத்திருந்தவர் டி.பி.எம்.மைதீன்கான். முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தார். ஆக்டீவ் அரசியல்வாதியாக இருந்த அவர் இப்போது மேடைகளைவிட்டு ஒதுங்கியே நிற்கிறார். திமுகவில் மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவராக இருக்கும் மைதீன்கான், இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கட்சியில் சீட் கூட கேட்கவில்லை. கடந்த ஆண்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவரது மகன் காஜா பீர்முகமது, சிகிச்சை கைகொடுக்காமல் பலியானார். அந்த சோகத்திலிருந்து இன்னும் மைதீன்கான் மீளவில்லை என்கிறார்கள். அதனால், முக்கிய தலைவர்கள் நெல்லைக்கு வரும்போது மட்டும் தலைகாட்டும் மைதீன்கான், அத்தோடு ஒதுங்கிவிடுகிறாராம். அவரைத் துடிப்பான அரசியல்வாதியாக பார்த்துப் பழகிய பாளையங்கோட்டை வாசிகள், “மீண்டும் அவர் பழையபடி ஆக்டீவ் அரசியலுக்குத் திரும்பவேண்டும்” என்கிறார்கள்.

Related Stories

No stories found.