பிளாஸ்டிக் சேர்தானா தலைவா?

பிளாஸ்டிக் சேர்தானா தலைவா?

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில், கும்பகோணம் திமுக எம்எல்ஏ-வான அன்பழகனைச் சந்திக்க அவரது கும்பகோணம் அலுவலகத்துக்குச் சென்றாராம். அவரை அன்போடு வரவேற்று தனது இருக்கையில் அமரச் சொன்னாராம் அன்பழகன். “இல்லை... அது உங்களுடைய இருக்கை. அதில் நீங்கள் தான் அமர வேண்டும்” என்று மறுத்த திருமா, அருகிலிருந்த ஒரு பிளாஸ்டிக் சேரை இழுத்துப்போட்டு அமர்ந்திருக்கிறார். அப்போது இருவரும் பேசிக்கொண்டிருக்கும் படத்தை யாரோ ஆர்வக்கோளாறில் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்துவிட்டு ஆர்ப்பரித்துக் கிளம்பி வந்த சிலர், 'எங்க போனாலும் உனக்கு பிளாஸ்டிக் சேர் தானா தலைவா?' என்று வலைதளத்தில் கிண்டலடித்தார்கள். இதையும் அரசியல் ஆயுதமாக கையிலெடுத்த பாஜகவினர், 'திமுக தலைவர்கள் யாரும் திருமாவளவனை மதிப்பதில்லை' என தங்கள் பங்கிற்கு சமூகவலைதளத்தில் விசிகவுக்கும் திமுகவுக்கும் சிண்டு முடிந்து கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in